செய்திகள்

சமந்தா டப்பிங்! எந்தப் படத்திற்காக?

நடிகை சமந்தா டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால்  சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும், அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமந்தா டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. காரணம், கடந்த சில மாதங்களாக சினிமா சார்ந்து சமந்தா எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தார்.

தற்போது, ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவாகும் ‘சிடாடல்’ படத்தில் சமந்தா நடித்து வருவதால், அத்தொடருக்காக டப்பிங் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இப்புகைப்படத்தில் சமந்தாவின் வலது கையில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதற்கான அடையாளம் உள்ளது. இது,  ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT