முகப்பு
செய்திகள்

'கங்குவா' படம் எப்படி உள்ளது? சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா

'கங்குவா' படத்தின் பிரம்மாண்டத்தை புகழ்ந்த விவேகா

Updated On : 1 ஜூலை, 2024 at 8:07 AM
கங்குவா(கோப்புப் படம்)
பகிர்:

'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்ததாக பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்ததாக பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்!

இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்...இவ்வாறு இவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →