செய்திகள்

இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கும் நட்சத்திரங்கள்!

DIN

தமிழ் சினிமாவில் இனி அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தாண்டின் துவக்கத்திலிருந்தே தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களைத் தவிர வேறெந்த படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்தாண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் வெளியாகி ரூ. 100 கோடியை வசூலிக்க முடியாமல் திணறின.

ஆனால், யாரும் எதிர்பாராததுபோல் சுந்தர்.சியின் அரண்மனை - 4 திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா திரைப்படமும் ரசிகர்கள், விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று நூறு கோடி வசூலை நெருங்கியுள்ளது.

தற்போது, இந்தாண்டின் முதல் 6 மாதம் முடிவடைந்தள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2, தனுஷின் ராயன், சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ரஜினியின் வேட்டையன், விஜய் நடித்த கோட், சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், அஜித்தின் விடாமுயற்சி, தக் லஃப் என தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் உள்ள ஒவ்வொரு படமும் தனித்துவமான பின்னணி கொண்டதால், இந்தாண்டு இறுதி வரை திரை ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT