நயன்தாரா 
செய்திகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்: நயன்தாரா

நடிகை நயன்தாரா பெண்களின் மாதவிடாய் காலம் குறித்து பதிவிட்டுள்ளார்.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

இக்குழந்தைகளின் புகைப்படங்களையும், காணொளிகளை அடிக்கடி இருவரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அதில், “ ஒரு பெண் ஒரு மாதத்தில் பலவிதமான நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்கனவே பலவிதமான ஹார்மேன் மாற்றங்களை சந்தித்துவரும் நாம் நேசிக்கப்படுவதற்கும் ஆறுதல்படுத்தப்படுவதற்கும் ஏங்குகிறோம். நான் எனது பெமி9 உபயோகித்து எனது சௌகரியத்தைக் (வசதி) கண்டுள்ளேன். அதேபோல் நீங்களும் உங்களுக்கு சௌகரியத்தை தரும் ஒன்றினை தேர்வு செய்யுங்கள். இதை நான் இந்தத் தயாரிப்புடன் தொடர்பு இருப்பதால் கூறுவதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு மிகவும் நன்றாக வேலை செய்ததால் கூறுகிறேன்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்னையில்லாத சௌகரியமான மாதவிடாய் சுழல் அமைய வாழ்த்துகிறேன். மாதத்தின் மற்ற நேரத்தைப்போல இந்த நேரமும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் கோமதி உடன் இணைந்து நடிகை நயன்தாரா இந்தாண்டு ஜனவரியில் பெமி9 பிராண்டில் சானிடரி நாப்கினை வெளியிட்டார். இதனை விளம்பரப்படுத்தவும் பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT