செய்திகள்

குட் பேட் அக்லியில் எஸ்.ஜே.சூர்யா?

DIN

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.

மேலும், குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”இப்போது இந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டாம். குட் பேட் அக்லியில் இருக்கிறேனா என எனக்கும் தெரியவில்லை. பார்ப்போம்” என பதிலளித்தார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படமான மார்க் ஆண்டனியில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT