கேம் சேஞ்சர் - ராம் சரணுக்கான படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் ராம் சரண் கேம் சேஞ்சர் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
இந்த நிலையில், ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.