ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!
ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...
ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் - 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில், முக்கிய காட்சியொன்றில் ரஜினியுடன் நடிகர்கள் மோகன்லால், பவன் கல்யாண், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 160 கோடிக்குப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Following the completion of filming for Jailer 2, the film crew celebrated by cutting a cake.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.