ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்!
நடிகர் சசிகுமார் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தின் பெரிய வெற்றிக்குப் பின்பும் திரைப்படங்களை இயக்கி வந்தார். அதேநேரம், நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களைப் பெற்றார்.
கிராமப்புரங்களுக்கான நாயகன் என்கிற அடையாளத்துடனே இன்றும் நீடிக்கிறார். ஆனால், இடையில் சில படங்களின் தோல்வியால் மார்க்கெட் இழந்தவருக்கு அயோத்தி திரைப்படம் கைகொடுத்தது. தொடர்ந்து, இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கருடன் திரைப்படமும் ரூ.50 கோடி வரை வசூலித்து இவருக்கு மீண்டும் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்விப்படமான நிலையில், சிறிய பட்ஜெட் படமொன்றை இயக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில், நாயகான சசிகுமாரும் நாயகியாக ஏழுகடல் ஏழு மலை படத்தில் நடித்த சைத்ராவும் நடிக்கிறார்களாம். இது, ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.