நடிகர் ஹிப்ஹாப் ஆதியை ரோஹித் சர்மா என நினைத்து பேசிய ரசிகர்! வைரல் விடியோ!
நடிகர் ஹிப்ஹாப் ஆதியை ரோஹித் சர்மா என நினைத்து பேசிய ரசிகரின் விடியோ வைரலாகி வருகிறது.
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்’ படத்தில் நடித்திருந்தார். கலவையாம விமர்சனங்களைப் பெற்ற இப்படத்துக்கு 2 படங்களில் நடித்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி கூறியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஹிப்ஹாப் ஆதியிடம் ரோஹித் சர்மா என நினைத்து பேசிய விடியோ வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, “நான் ரோஹித் சர்மா மாதிரியா இருக்கேன்?” எனக் கேட்டு ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதனால் இந்திய அளவில் ரோஹித் சர்மா பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியை ரசிகர் ஒருவர் ரோஹித் என நினைத்தது இணையத்தில் சிரிப்பலைகளை வரவழைத்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.