செய்திகள்

கைதி - 2 எப்போது? கார்த்தி பதில்!

DIN

கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி இந்தாண்டில் தனது நடிப்பில் மெய்யழகன், வா வாத்யாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்பதைத் தெரிவித்ததுடன் கைதி - 2 திரைப்படம் அடுத்தாண்டு தயாராகும் எனக் கூறினார்.

இதனால், கூலி திரைப்படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் கைதி - 2 பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT