செய்திகள்

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

DIN

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கவுள்ளார்.

நடிகர் மம்முட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டர்போ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.80 கோடி வரை வசூலித்தது.

இதற்கிடையே, நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, இவர்கள் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் துவங்கியுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தின் நாயகியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாகவும் தகவல்.

இப்படம் காதலும் ஆக்‌ஷனும் கலந்த கதையாக இருக்கும் என்றும் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸார்ச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT