கண்மணி மணோகரன். 
செய்திகள்

புதிய தொடரில் கண்மணி மனோகரன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் புதிய தொடரொன்றில் நடிக்கவுள்ளார்.

DIN

சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் புதிய தொடரொன்றில் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன். பின்னர் இத்தொடரிலிருந்து திடீரென்று விலகினார்.

இவர், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

கண்மணி மனோகரனுக்கு பிரபல தொகுப்பாளரான அஷ்வத் என்பவருடன் ஜூலை 3 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் கண்மணி மனோகரன் நடிக்கவுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த கண்மணி மனோகரன், புதிய தொடரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதி கண்ணாம்மா தொடரை இயக்கிய பிரவீன் பென்னட், மகாநதி தொடரையும் இயக்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் 2023 ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தந்தையை இழந்த 4 சகோதரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் இத்தொடரின் கதையாக எடுக்கப்பட்டுவருகிறது.

மகாநதி தொடர்.

இந்தத் தொடரில் நடிகை திவ்யா கணேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, சுவாமிநாதன் அனந்தராமன், ருத்ரன் பிரவீன், கமுருதீன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இத்தொடரில், விஜய் பாத்திரத்தில் நடித்துவரும் சுவாமிநாதன் அனந்தராமனின் முன்னாள் காதலியாக, வெண்ணிலா பாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT