இலங்கையில் தொடங்கியது விஜய் தேவரகொண்டா 12 படப்பிடிப்பு!
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12ஆவது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்.
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது.
2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இலங்கையில் இதற்கான படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் 13ஆவது படமென அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார் உடன் நடித்து வருகிறார்.