கமல்ஹாசனுடன் சீமான்.  
செய்திகள்

எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்..! சீமானின் இந்தியன் 2 விமர்சனம்!

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தைப் பார்த்த சீமான் புகைப்படம் வைரல்.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று மட்டும் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமலுடம், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தினை பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கலந்துகொண்டார். சீமான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமலுடன் படம் பார்த்த சீமான், “திரைக்கலை அறிவியலின் அற்புதமான குழந்தை. பொழுதுபோக்கு படமாக அல்லாமல் நல்ல பொழுதாக அமையும் படம். ஒவொரு தோற்ற மாறுதலுக்கும் உடல்மொழியை மாற்றி கமல் நன்றாக நடித்துள்ளார். நமது பிரச்னையை சரிசெய்ய இறைதூதர் வரமாட்டார். நாம்தான் இறங்கி செய்ய வேண்டும். நீ உன் வீட்டை சுத்தம் செய் உலகம் மாறுமென படம் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார். நோய் தீரும்வரை மருந்து தரவேண்டும். அதனால் பல இந்தியன்கள் வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT