செய்திகள்

இந்தியன் - 2 ரூ.100 கோடி வசூல்!

DIN

இந்தியன் - 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

ஆனாலும், படத்தின் வசூலுக்கு பாதிப்பு வராது என்றே தெரிகிறது. காரணம், இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமா எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

SCROLL FOR NEXT