ராம் பொதினேனி, காவ்யா தாபர். 
செய்திகள்

ராம் பொதினேனி - காவ்யா தாபரின் குத்து பாடல்!

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் குத்து பாடல் வெளியாகியுள்ளது.

DIN

தமிழில் அடையாளம் எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் ராம் பொதினேனி. பின்னர் தெலுங்கில் படங்களை தொடர்ச்சியாஅக நடித்துவரும் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது. இருப்பினும் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. 

ஸ்கந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது டபுள் ஸ்மார்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்குகிறார்.

புரி ஜெகந்நாத் உடன் நடிகை சார்மி கௌர் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். காவ்யா தாபர் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய குத்து பாடலொன்று லிரிக்கல் விடியோவாக வெளியாகியுள்ளது. மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி ஒளிப்பதிவாளர் கியானி கியானெல்லி மற்றும் ஷியாம் கே. நாயுடு என இந்தப் படத்துக்கு இரண்டு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT