சின்னத்திரை நாயகி பாவனி ரெட்டி தனது காதலனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்தநாளையொட்டி தனது காதலனிடம் கோரிக்கை ஒன்றையும் அவர் வைத்துள்ளார். சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் 2015-ல் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பாவனி ரெட்டி. அதற்கு முன்பு இரு தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தெலுக்கில் புகழ் பெற்றிருந்தார்.
தமிழில் ரெட்டைவால் குருவி தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய சன் தொலைக்காட்சி தொடர்களிலும், பாசமலர், நீலக்குயில் ஆகிய தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அப்போது நடன இயக்குநர் அமீருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இவர்களின் காதல், தொடங்கியது.
தற்போதுவரை அமீரும் பாவனியும் இணைபிரியா காதலர்களாக உள்ளனர். அடுத்தடுத்து படங்களிலும் இருவரும் நடிக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அஜித் குமாரின் துணிவு படத்தில் இருவரும் காதலர்களாகவே நடித்திருந்தனர்.
திரை வாழ்க்கையில் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருப்பதால், திருமணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.
பிக்பாஸ் புகழ் அமீர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க இயலாததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருக்கு வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
அதில், என்னை என்றுமே மகிழ்ச்சியாக வைத்திருப்பவனுக்கு மகிழ்வான பிறந்தநாள் வாழத்துகள். இந்த நாளைக் கொண்டாட உன் அருகே நான் இல்லை என்பதை அறிவேன். என்னிடம் சீக்கிரம் வருவாயாக. என் அனைப்புக்காகவும், முத்தங்களுக்காகவும், கொஞ்சல்களுக்காகவும், ஐ லவ் யூ என்று சொல்வதற்காகவும் சீக்கிரம் வருவாயாக. என் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.