புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!
சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, செம்பருத்தி, அய்யனார் துணை உள்ளிட்டத் தொடர்களில் நடித்தவர் தீப்தி கபில்.
அய்யனார் துணை தொடரில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை தீப்தி கபில் புதிய வீடு கட்டியுள்ளார்.
இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவில் அய்யனார் துணை தொடரின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இவர்களுடன் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ள தொடர்களில் அய்யனார் துணை தொடரும் ஒன்றாக உள்ளது. மக்கள் மனம் கவர்ந்த தொடராக மாறியுள்ள அய்யனார் துணை தொடரில், கதாபாத்திரங்களின் பெயர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், வானதி என இதிகாச கதாபாத்திரங்களின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க நான்கு சகோதரர்கள் உள்ள வீட்டின் மூத்த மகனை போலியாக திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டில் நாயகி சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நான்கு சகோதரர்களுக்கும் அடுத்தடுத்து காதல், திருமணம் நடக்கவுள்ளதால், தொடர் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்தத் தொடரில் நாயகியின் அண்ணியாராக நடித்து வருபவர் நடிகை தீப்தி கபில். சின்ன திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கியவர் அடுத்தடுத்து சின்ன திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். தற்போது அய்யனார் துணை தொடரில் தீப்தி நடித்து வருகிறார்.
இவர் தனது கணவருடன் இணைந்து புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அய்யனார் துணை தொடரின் மதுமிதா, அரவிந்த், பர்வேஷ், முன்னா மற்றும் செம்பருத்தி தொடரின் நாயகி ஷபானா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Vijay TVs Ayyanar thunai serial actress dheepthi kapils new home ceremoney
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.