முகப்பு
செய்திகள்

புதிய சாதனை படைத்த அண்ணா தொடர்! வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடர் 400 நாள்களைக் கடந்து புதிய சாதனை.

Updated On : 17 ஜூலை 2024, 4:25 pm IST
அண்ணா தொடரின் போஸ்டர்
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடர் 400 நாள்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதில் ஒளிபரப்பப்படும் தொடர்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

எனினும் மற்ற தொலைக்காட்சி தொடர்களுடன் ஒப்பிடுகையிலும், டிஆர்பி பட்டியலிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் சற்று பின்தங்கியுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஜீ தமிழில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடர் 400 எபிஸோடுகளைக் கடந்துள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி வட்டார வழக்கில், சூழ்நிலை காரணமாக தாய் சிறைக்குச் சென்ற பிறகு, தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளை மையப்படுத்தி அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மூத்த அண்ணனாக இருந்து, தங்கைகளை பராமரித்து வரும் அண்ணாவை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியே வரும் தாய் - சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த தாய்மாமன் - தங்கைகளின் திருமண வாழ்க்கை - என கதைக்களம் மிகவும் அடர்த்தியாக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு எபிஸோடிலும் மக்களைக் கவரும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா தொடர் - அண்ணாவும் தங்கைகளும்

குறிப்பாக இத்தொடரில் வில்லனாக நடித்துவரும் பூவிலங்கு மோகனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சிறந்த வில்லனுக்கான சின்னத்திரை விருதும் அண்ணா தொடரில் நடித்ததற்காக பூவிலங்கு மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பூவிலங்கு மோகன்

சன் தொலைக்காட்சியின் நாதஸ்வரம் தொடருக்குப் பிறகு, பூவிலங்கு மோகனுக்கு தீனி போடும் கதாபாத்திரமாக அண்ணா தொடரின் வில்லன் பாத்திரம் உள்ளது.

இத்தொடரில் செந்தில் குமார் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நித்யா ராமும் நடிக்கின்றனர். ஏ. துர்கா, சரவணன் இயக்க, ராஜம்மாள் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.