முகப்பு
செய்திகள்

கங்குவா முதல் பாடல் அறிவிப்பு!

Updated On : 18 ஜூலை, 2024 at 12:47 PM
பகிர்:

கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல் பாடலை தயாரிப்பு நிறுவனம் ஜூலை 23 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →