டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!
பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் புதிய படம் “பள்ளிச்சட்டம்பி”. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் ”காட்டுச்செம்பகம்” எனும் முதல் பாடலை இன்று (பிப். 12) படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்துடன், “பள்ளிச்சட்டம்பி” படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The first song from Malayalam actor Tovino Thomas' movie "Palli Chattambi" has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.