நடிகர் விக்ரம் 
செய்திகள்

விக்ரம் 63 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் விக்ரமின் 63 ஆவது படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ளார்கள்.

நடிகர் விக்ரமின் 62ஆவது படம் வீர தீர சூரன். இதனை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்குகிறார். இதனை நேரடியாக, படத்தின் இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளனர்.

வீர தீர சூரன்.

இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்கள். ஜி.வி. இசையமைக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மௌனகுரு, மகாமுனி படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சாந்தகுமார். இவரது சமீபத்திய ரசவாதி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் விக்ரம் 63 படத்தின் கதையை இயக்குநர் சாந்த குமார் கூறியுள்ளதாகவும் விகரமுக்கு கதை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் சாந்தகுமார்

தில், தூல் படத்தின்போது சாந்தகுமார் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். அதனால் விக்ரமிடம் ஏற்கனவே நல்ல பழக்கம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான கதைகளை எடுக்கும் சாந்தகுமார் பல தோற்றங்களில் கலக்கும் விக்ரம் இணைந்தால் மகிழ்ச்சியாக இருக்குமென விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT