செய்திகள்

கவனம் ஈர்க்கும் வீர தீர சூரன் எஸ்.ஜே.சூர்யா!

DIN

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து தென்னிந்தியளவில் கவனம் பெற்றுள்ளார்.

தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, வீர தீர சூரன் படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தனுஷின் 50-வது படமான ராயன் மற்றும் தெலுங்கில் நானி நடிக்கும் சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை - தமிழில்) படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது. அதில், அருணகிரி என்கிற பெயரில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT