த்ரிஷா நடித்த பிருந்தா டிரைலர்!
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவான புதிய இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. தற்போது, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதேநேரம், இயக்குநர் சூர்யா மனோஜ் வங்கலா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான பிருந்தா என்கிற இணையத் தொடரிலும் கதை நாயகியாக நடித்துள்ளார். இதில், இந்திரஜித் சுகுமாரன், ஜெயப்பிரகாஷ், அமானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தற்போது இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இத்தொடரில், த்ரிஷா காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.