செய்திகள்

பாட்டல் ராதா முதல் பாடல்!

DIN

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் 'பாட்டல் ராதா' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கியவர், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.


தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், 'பாட்டல் ராதா' படத்தின் முதல் பாடலான, ‘யோவ் பாட்டல்’ பாடல் வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில் பாக்கியம் சங்கர் எழுதிய இப்பாடலை கானா அப்பில்லோ, கானா செல்லமுத்து, கானா பாலமுருகன் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT