தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!
தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தங்கலான் படக்குழு புரோமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக, படத்தை விளம்பரப்படுத்த தென்னிந்திய மாநிலங்கள், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இப்படம், ஆக.15ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.