செய்திகள்

மஞ்ஞுமல் பாய்ஸ் குணா குகை விஎஃப்எக்ஸ் காட்சிகள் வெளியீடு!

DIN

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் உருவாக்கம் குறித்த விடியோ வெளியாகியுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.

இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹிந்தி படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குணா குகை காட்சிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதில், கலை இயக்குநரின் பணி முக்கியமாகக் கருதப்பட்டது. மேலும், விஎஃப்எக்ஸ் குழுவினரின் பணிகளும் தத்ரூபமாக இருந்தன. தற்போது, விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்க விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்: உதவித்தொகை ரூ. 10,000-ல் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

10 லட்சம் பேருக்கு 0.11 விமான நிலையங்கள் மட்டுமே..! -பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

SCROLL FOR NEXT