இந்தியன் 2 படத்தை விமர்சித்த நடிகை அம்பிகா.  
செய்திகள்

மேலும் 15 நிமிடங்களை குறைக்கலாம்..! இந்தியன் 2 படத்தை விமர்சித்த நடிகை அம்பிகா!

இந்தியன் 2 திரைப்படத்தைப் பார்த்த நடிகை அம்பிகா மேலும் 15 நிமிடங்களை குறைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திய பகுதிகள் உள்பட 11.51 நிமிடக் காட்சிகளை நீக்கி புதிய வடிவத்தை உருவாக்கியதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இந்நிலையில் முன்னாள் நடிகை அம்பிகா படம் பார்த்து தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியன் 2 பார்த்தேன். எனக்கு பிடித்தது. படத்தின் நீளம் 15 நிமிடங்கள் குறைத்தால் நன்றாக இருக்குமென தோன்றுகிறது அவ்வளவுதான். கடின உழைப்பு, நடிப்பு, அதிகமான பணம்.. தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே 12 நிமிடங்கள் குறைத்துள்ள நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் குறைப்பதா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கமலுடன் அம்பிகா.

நடிகை அம்பிகா கமல், ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். 61 வயதாகும் நடிகை அம்பிகா தற்போது சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT