செய்திகள்

ஒரு ஊருல ராஜா.. மாரி செல்வராஜின் வாழை பட பாடல் வெளியானது!

வாழை திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா...’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) வெளியாகியுள்ளது.

DIN

மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்திலிருந்து முதல் பாடல், கடந்த 18-ஆம் தேதியன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா...’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் இசையமைப்பளரான சந்தோஷ் நாரயணன் பாடியுள்ள இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை இன்ஸ்டாகிராமில் படத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

‘காக்கா கத கேக்கும்போது யானை மூஞ்சு தெரியுது

யானைக் கத கேக்கும்போது பூனை சத்தம் கேக்குது

பூனைக் கத கேக்கும்போது தெருநாய் கொறைக்குது..’ என குழந்தைகளை வெகுவாகக் கவரும் வரிகளை எழுதி பாடலாக வெளியிட்டுள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்.

வாழை படத்தில் கலையரசன், நிகிலா விமல், எம். பொன்வேல், ஆர். ராகுல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

போகி கொண்டாட்டம்: சென்னையில் கடும் புகை மூட்டம்!

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT