நடிகர் மகேஷ் பாபு ராயன் திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ராயன் திரைப்படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும், இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் 3 நாளில் இத்தனை கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப்படம் ராயன்தான்.
இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ராயன் படத்தைப் பாராட்டி எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘ ராயன்.. தனுஷ் அற்புதமாக இயக்கி நடித்திருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் புல்லரிக்கும் இசை. பார்க்க வேண்டிய திரைப்படம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.