முகப்பு
செய்திகள்

கைவிடப்பட்ட தனுஷ் - ஹெச். வினோத் திரைப்படம்?

தனுஷ் - ஹெச். வினோத் திரைப்படம் குறித்து...

Updated On : 9 பிப்ரவரி 2026, 12:26 pm IST
தனுஷ் - ஹெச். வினோத்
பகிர்:

நடிகர் தனுஷ் - ஹெச். வினோத் கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன் 55-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இப்படத்தைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில், தனுஷ் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், தனுஷின் அடுத்தடுத்த படங்களால் போதுமான நாள்கள் கிடைக்காததால் ஹெச். வினோத்தின் படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

reports suggests dhanush and h.vinoth movie dropped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments