சர்தார் - 2 படத்தில் 3 நாயகிகள்?
சர்தார் - 2 படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிறது. இதன், படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில், நடிகர் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.