கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரகு தாத்தா'. சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தற்போது, இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர நாளான வரும் ஆக. 15 ஆம் தேதி வெளியாகிறது.