தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு டிரெயின் எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரின் 50-வது படமான மகாராஜா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை ரூ.20 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ரூ.30 கோடிக்கும் மேல் சம்பளம் பெறும் விஜய் சேதுபதி, 96 படத்திற்குப் பின் தமிழில் வணிக ரீதியான வெற்றியைக் கொடுக்காததால் ரூ.10 கோடி வரையே சம்பளம் வாங்கி வந்தார்.
ஆனால், தற்போது தனக்கான மார்க்கெட் இல்லாத சூழலிலும் அதிக சம்பளத்தைக் கேட்பது தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.