மருமகள் தொடர் ஒளிபரப்பாகு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்திருந்தார்.
தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராகுல் ரவி, தற்போது மருமகள் தொடரில் நடிக்கிறார்.
இத்தொடரில் இவருக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே தொடரின் 2ஆம் பாகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லா நடிக்கிறார்.
மருமகள் தொடரின் முன்னோட்டக் காட்சி (ப்ரோமோ) முன்னதாக வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இத்தொடரின் தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்ச்ல் தொடர் நிறைவடையவுள்ளதால் சிங்கப் பெண்ணே தொடர் ஜூன் 10 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
இதனால், சிங்கப் பெண்ணே ஒளிபரப்பாகும் நேரமான இரவு 8 மணிக்கு, புதிய தொடரான மருமகள் தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.