முகப்பு
செய்திகள்

அரண்மனை - 4 ஓடிடி தேதி!

அரண்மனை - 4 திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜூன், 2024 at 1:38 PM
பகிர்:

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

இதில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படத்தில் இடம்பெற்றிருந்த ‘அச்சச்சோ’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற ஜூன் 21 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.