செய்திகள்

எதிர்நீச்சல் தொடர் நிறைவு: டிஆர்பியில் கலக்கும் சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதால், பிரபல தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

DIN

எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதால், பிரபல தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் வரும் ஜூன் 8 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளதால் டிஆர்பியில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் சிங்கப் பெண்ணே தொடர், எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில், அதாவது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

சிங்கப் பெண்ணே தொடர் நடிகை மணீஷா.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித், தர்ஷக் கெளடா ஆகியோர் நடிக்கின்றனர்.

கிராமத்தில் வளர்ந்த இளம் பெண் குடும்ப வறுமை காரணமாக நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

பல வாரங்களாக தொடர்ந்து, டிஆர்பி பட்டியலில் சிங்கப் பெண்ணே தொடர் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT