காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன.
சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி இணையத் தொடர் மிகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘லாக்டு’ எனக் குறிப்பிட்டு இருவரின் கைகள் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் யார் இவர் என அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள்.
விரைவில் அவரது முகத்தினை வெளியிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.