முகப்பு
செய்திகள்

மம்மூட்டி - கௌதம் மேனன் பட அப்டேட்!

நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.

Updated On : 6 ஜூன், 2024 at 10:08 AM
பகிர்:

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டர்போ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.80 கோடி வரை வசூலித்தது.

இதற்கிடையே, நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, இவர்கள் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஸார்ச், கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments