நடிகை வரலட்சுமியின் திருமணத்தை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் சரத்குமார்.
நடிகை வரலட்சுமிக்கும் ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது. வரலட்சுமியின் திருமணம் ஜூலை 2 ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றாலும் அதற்கு முன் நிகழும் மெஹந்தி நிகழ்ச்சி சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலிலும் நடைபெற உள்ளதாம். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி மூவரும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கே சென்று வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.