செய்திகள்

புஷ்பா - 2: ஃபகத் ஃபாசில் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

DIN

புஷ்பா - 2 திரைப்படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசில் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் புஷ்பா.

வனத்திலிருந்து செம்மரங்களை வெட்டி கடத்தல் செய்யும் கதாநாயகனின் கதையாக இப்படம் உருவானது. இதில் நாயகனாக அல்லு அர்ஜுனும் வில்லனாக ஃபகத் ஃபாசிலும் நடித்திருந்தனர். படத்தின் பிரம்மாண்ட வசூலைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பாகத்திலும் ஃபகத் ஃபாசிலே வில்லனாக தொடர்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் ஒருநாளுக்கு ரூ.12 லட்சம் சம்பளம் பெற்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. காரணம், இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்கள் நடைபெற்றதைக் கணக்கில்கொண்டு ஒருநாள் சம்பள முறைக்கு ஃபகத் மாறியதாகக் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT