செய்திகள்

போக்கிரி மறுவெளியீட்டு டிரைலர்!

DIN

நடிகர் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மறுவெளியீடாகிறது.

மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'போக்கிரி' படம் தமிழில் அதே பெயரில் விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தப் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது. 

நடிகராகவும், நடன இயக்குநராக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபு தேவா, முதன்முறையாக தமிழில் இயக்குகிறார் என்பதே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாக காரணமாக அமைந்தது.

படத்தில் அதுவரை எல்லா உணர்வுகளையும் அதீதமாக வெளிப்படுத்தி நடித்து வந்த விஜய், முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் நடித்தது ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. 

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி திரைப்படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. தற்போது, மறுவெளியீடுக்கான 4கே தர டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதேநாளில் துப்பாக்கி திரைப்படமும் மறுவெளியீடாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT