அதிகரிக்கும் மகாராஜா காட்சிகள்!
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது.
விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.
மகாராஜா திரைப்படம் வெளியான இரண்டு நாள்களில் ரூ.9.80 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் இப்படம் ரூ.15 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.