செய்திகள்

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

DIN

நடிகர் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம் செய்ததை அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், அவரால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக போட்டியாளர்கள் முன்வைத்தனர்.

இதனால் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு நேற்று (ஜூன் 16) நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது, காதல் திருமணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT