முகப்பு
செய்திகள்

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

ரஜினி - 173 குறித்து...

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:29 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:24 AM

நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார்.

Advertisement

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 11:25 AM

ஆனால், சில காரணங்களால் சுந்தர் சி விலக, தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதன், அறிமுக விடியோவில் இடம்பெற்ற ரஜினியின் தோற்றமும் அனிருத்தின் பின்னணி இசையும் கவர்ந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கும் என இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.