முகப்பு
செய்திகள்

மகாராஜா வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Updated On : 17 ஜூன், 2024 at 9:48 AM
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.

படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டில் வெளியான படங்களில் இப்படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாளில் இப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.