சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ டிரைலர்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்காக சூர்யாவுக்கும் சுதா கொங்காராவுக்கும் தேசிய விருதுகளும் கிடைத்தது.
தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு ’சர்ஃபிரா (sarfira)’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். வருகிற ஜூலை 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்பதையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ‘சர்ஃபிரா’ டிரைலரை இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.