சூர்யநாராயண சுவாமி கோயிலுக்கு சென்ற சாய் பல்லவி படங்கள்: சாய் பல்லவி எஃப்சி /எக்ஸ்
செய்திகள்

சூர்யநாராயண சுவாமி கோயிலுக்கு சென்ற சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி ஆந்திரத்தில் உள்ள சூர்யநாராயண சுவாமி கோயிலுக்கு சென்றுள்ள படங்கள் இணையத்தில் வைரல்.

DIN

நடிகை சாய் பல்லவி ஆந்திரத்திலுள்ள சூர்யநாராயண சுவாமி கோயிலுக்கு சென்றுள்ள படங்கள் இணையத்தில் வைரல்.

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார்.  நாக சைதன்யாவின் 23வது படமான ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.

சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான விராட பருவம், கார்கி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரத்தில் ஸ்ரீகாகுளம் பகுதியில் தண்டேல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு அருகிலுள்ள அரசவள்ளி சூர்யநாராயண சுவாமி கோயிலுக்கு சென்றுள்ளார். இதன் புகைப்படங்கள் விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழில் சிவகார்த்திகேயன் உடன் அமரன் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT