நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும்.  படம்: இன்ஸ்டா / ஜெயம் ரவி
செய்திகள்

விவாகரத்து உண்மையா? ஜெயம் ரவியின் மனைவி பதில்!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரவி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி என அழைக்கப்படுகிறார். இவருக்கும் ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

குடும்பத்துடன் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி பிர்தர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சினிமா பிரபலங்கள் பலருக்கும் விவாகரத்து நடைபெற்று வரும் சூழலில் ஜெயம் ரவியும் இதில் சேர்ப்போகிறார் என்ற வதந்திகள் சமீத்தில் இணையத்தில் உலவின.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் படத்தின் வசனங்களைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

அதில் காதல் எனும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்ற புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

நேற்றுடன் (ஜூன் 20) ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT