நடிகை சாரா அலி கான் தனது முதல் படத்தை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் உடன் கேதர்நாத் படத்தில் நடித்திருந்தார். 2018இல் வெளியான இப்படத்தினை அபிஷேக் கபூர் இயக்கினார். இந்து மதத்தினைச் சேர்ந்த பெண், முஸ்லீம் ஆணை காதலிப்பது போன்ற கதை. 2013 அன்று கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடிப்படையாகவும் அந்த காதலையும் தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படம் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
நடிகர் தனுஷுடன் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார். தமிழில் கல்யாண கலாட்டா என்ற பெயரில் வெளியானது. இதில் வரும் சக்க சக்க பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சயிப் அலி கான் 1991இல் அமிர்தா சிங்கினை திருமணம் செய்து 2004இல் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு பிறந்தவர்கள்தான் சாரா அலி கான், இப்ரஹிம் அலி கான். பின்னர் சயிப் அலி கான் 2012இல் கரீனா கபூரை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சாரா அலி கான் பேசியதாவது:
நான் எனது சகோதரன் இப்ரஹிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது. ஏனெனில் நான் அவனிடம் மிகவும் அம்மா போல நடந்துகொண்டு இருக்கிறேன். திடமான நபர் இப்ரஹிம். மிகவும் பக்குவனாவன். நான் அவனுக்கு அடிக்கடி அறிவுரைகளை வழங்குவேன்.
அதிகமாக பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவனுக்கு இரண்டு அம்மாக்கள் போலாகிவிட்டன. எனக்கும் அவனுக்கும் சிங்கிள் மதர் (கணவரைப் பிரிந்து வாழும் தாய்) என்பதால் நான் அவன்மீது கூடுதலாக அக்கறை எடுத்துக்கொண்டேன். இந்த மாதிரியான குடும்ப சூழலில் வழக்கமான சகோதர சகோதரிகளுக்கான கோடுகள் சில நேரங்களில் மங்கிவிடுகின்றன. அதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்க தோன்றுகிறது என்றார்.
கடந்த மார்ச் 21ஆம் நாள் சாரா அலிகான் நடிப்பில் ஏ வாடன் மேரி வாடன் எனும் படம் அமேசான் பிரைமில் வெளியானது. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை சாரா அலிகானுக்கு இன்ஸ்டாகிராமில் 45.2 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.